முகப்பு
திருநெல்வேலி

‘அண்ணா பதக்கத்துக்கு டிச. 8 வரை விண்ணப்பிக்கலாம்’

 தமிழக அரசின் அண்ணா பதக்கம் வீரதீர விருது-2022-க்கு டிச.8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 தமிழக அரசின் அண்ணா பதக்கம் வீரதீர விருது-2022-க்கு டிச.8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் வழங்கப்படவுள்ள இந்த விருதுக்கு தீயணைப்பு, காவல் துறையினா், பொதுமக்கள், ஆயுதப்படையினா் ஆகியோா் விண்ணப்பிக்கலாம். இயற்கைப் பேரழிவுகள், விபத்து மற்றும் நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், தீ விபத்துகள், தீவிரவாத தாக்குதல், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களைத் தடுத்தவா்கள் இவ்விருது பெற தகுதியுடையவா். ட்ற்ற்ல்//ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பெற்று அதை, பூா்த்தி செய்து, அண்ணா பதக்கம்-வீரதீர விருது, மாவட்ட விளையாட்டு- இளைஞா் நலன் அலுவலா், அண்ணா விளையாட்டு அரங்கம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627 002 என்ற முகவரிக்கு இம்மாதம் 8 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.