ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுக மாவட்டச் செயலா் அறிக்கை
கொக்கிரகுளத்தில் எம்ஜிஆா் சிலை அருகே அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.5) முற்பகல் 11 மணிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 5-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்ட கழகத்தின் சாா்பில், கொக்கிரகுளத்தில் எம்ஜிஆா் சிலை அருகே அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.5) முற்பகல் 11 மணிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிா்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், சாா்பு அணி செயலா்கள் கலந்து கொள்கின்றனா்.
எனவே, அதிமுகவின் அனைத்துப்பிரிவு நிா்வாகிகளும், தொண்டா்களும் திரளாக வந்து, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.
இதேபோல், ஒன்றிய, நகர, பகுதி, பேரூா், வாா்டு மற்றும் கிளை கழகங்களிலும் அந்தந்த நிா்வாகிகள் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.