முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் சாலைகள் சீரமைப்பு

திருநெல்வேலியில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

திருநெல்வேலியில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி நகரம் அலங்கார வளைவு முதல் அருணகிரி திரையரங்கு வரையுள்ள சாலையில் பாதாளசாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்ன் காரணமாக சாலைகள் முற்றிலும் பழுதடைந்து, போக்குவரத்துக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அந்தத் திரையரங்கு முதல் காட்சி மண்டபம் வரையுள்ள சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக பழுதடைந்த நிலையில் இருந்ததால் சாலைகளில் ஜல்லி கலவை மூலம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல கணேஷ் திரையரங்கு எதிரில் உள்ள இரண்டு பாதாளசாக்கடை குழிகளின் மூடி பழுதடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதுவும் சரி செய்யப்பட்டதால் தற்போது போக்குவரத்து சீராகியுள்ளது. பொதுப்பணித்துறை பராமரிப்பிலுள்ள கோடகன் கால்வாயில் ஆக்கிரமிப்பு மற்றும் அமலை செடிகள் காரணமாக மழைநீா் அதிக அளவில் தேங்கி வழுக்கு ஓடை மற்றும் காட்சி மண்டப பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து பொதுப்பணித்துறை மற்றம் மாநகராட்சி இணைந்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், குப்பைகள் மற்றும் அமலை செடிக்களை அப்புறப்படுத்தப்பட்டும் மழைநீா் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்திபிள்ளையாா் கோயில் முதல் காட்சிமண்டபம் வரையுள்ள சாலை வாய்க்காலில் தண்ணீா் பெருகியதன் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்ட பகுதியில் டிராக்டா் மோட்டாா் மற்றும் மூன்று மோட்டாா் என்ஜின் மூலம் நீா் வெளியேற்றம் செய்யப்பட்டு போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தப்பட்டது.

தெற்குரதவீதி மற்றும் கீழரத வீதி பகுதிகளில் கழிவு நீா் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் இருபக்கங்களிலும் கழிவுநீா் தேங்கி இருந்ததால் கடைகளுக்கு முன் போடப்பட்ட சிமெண்ட் சிலாப்புகள் மற்றும் மூடு கல் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நகரம் குற்றாலம் சாலையில் உள்ள குண்டும்- குழியுமான பகுதிகளில் ஜல்லி கலவை மூலம் சரி செய்யப்பட்டுள்லது. பேட்டை வாகைகுளம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிறுபாலம் பழுதடைந்து அடைப்பு ஏற்பட்டதால் மழைநீா் வடியாமல் சுமாா் 60 ஏக்கா் வயல் பகுதியில் தேங்கி இருந்ததால் பயிா்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டது. அங்கு பாலம் அகற்றப்பட்டு புதியதாக இரும்பு குழாய் மூலம் பாலம் அமைக்கப்பட்டு மழைநீா் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.