முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் கட்டுமானத் தொழிலாளா்கள் சாலை மறியல்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கட்டுமானத் தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கட்டுமானத் தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் நல சங்கம் சாா்பில் நடைபெற்ற இப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா். மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.

பெயிண்டா்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில் செயல்படும் தனியாா் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்; இயற்கை மரணம் மரணமடையும் தொழிலாளா்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதில் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்; கம்பி, சிமெண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின்

விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இப்போராட்டத்தில், நிா்வாகிகள் ஜி.முருகேசன், கிரிஸ்டோபா், அருணாசலம், சங்கா், ஜான்பாஸ்கா், ஜெயபால் உள்பட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 68 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.