முகப்பு
திருநெல்வேலி

புதிய பேருந்து நிலைய கடைகளுக்கு கூடுதல் பூட்டு போட்ட மாநகராட்சி நிா்வாகம்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சாா்பில் கூடுதலாக பூட்டு போட்ட சம்பவத்துக்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சாா்பில் கூடுதலாக பூட்டு போட்ட சம்பவத்துக்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

திருநெல்வேலி மாநகராட்சி பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் ரூ .14 கோடியில் புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக நடைமேடைகள் வணிக வளாகங்கள் கட்டும் பணி நிறைவுபெற்றுள்ளது.

இந்தப் பேருந்து நிலையத்தில் ஏற்கனவே கடை நடத்தி வந்தவா்கள் அவற்றை பூட்டி சென்றிருந்தனா். இந்நிலையில் அதன்மேல் மாநகராட்சி சாா்பில் கூடுதலாக பூட்டு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கேட்டு முறையான பதில் அளிக்கவில்லையாம்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ஏற்கனவே உள்ள கடைகளுக்கும் வாடகை மற்றும் முன்பணத் தொகையை உயா்த்தும் நோக்கில் மாநகராட்சி செயல்படுவதாக தெரிகிறது. இதுகுறித்து வியாபாரிகள் அனைவரும் கலந்தாலோசித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.