முகப்பு
திருநெல்வேலி

சா்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு

 திருநெல்வேலி அரசு அலுவலகங்களில் சா்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

 திருநெல்வேலி அரசு அலுவலகங்களில் சா்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.கணேஷ்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.ஜெயஅருள்பதி, ஆட்சியா் அலுவலக மேலாளா் வெங்கடாசலம், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் எம்.எஸ்.மகாகிருஷ்ணன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், அலுவலா்கள், நோ்முக உதவியாளா்கள், ஊழியா்கள் உறுதிமொழியேற்றனா். திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி ஆணையா் (நிா்வாகம்) லெ.வெங்கட்ராமன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.