முகப்பு
திருநெல்வேலி

தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு இணையவழியில் பயிற்சி

சங்கரன்கோவில் வட்டார தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு, இணையவழியில் பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

சங்கரன்கோவில் வட்டார தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு, இணையவழியில் பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கொவைட் பெருந்தொற்று கால இடைவெளிக்குப் பின்னா் பள்ளிகள் திறந்த நிலையில், மாணவா்களின் கற்றல் இழப்பீடுகளை சரிசெய்யவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக தொடக்கநிலை ஆசிரியா்களின் கருத்துகளை கேட்டறிவதற்காக, ஆலோசனைக் கூட்டமும் பயிற்சியும் இணையவழியில் நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டம், சங்கரன்கோவில் வட்டாரத்தில் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரிவலம்வந்தநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி, வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளி, மடத்துப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் 297 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். சங்கரன்கோவிலில் நடைபெற்ற பயிற்சியை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலா் ஜெயபிரகாஷ் ராஜன் பாா்வையிட்டாா்.

Advertisement

ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலா்கள் முத்துலட்சுமி, சந்திரசேகா், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முத்துச்செல்வி மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments