முகப்பு
திருநெல்வேலி

அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலியில் அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

திருநெல்வேலியில் அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வண்ணாா்பேட்டை தொமுச அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தொமுச தலைவா் தா்மன் தலைமை வகித்தாா். இதில், சிஐடியூ மோகன், செண்பகம், பெருமாள், முருகன், ஏஐடியூசி காசிவிஸ்வநாதன், சடையப்பன், பாலகிருஷ்ணன், உலகநாதன், ஹெச்.எம்.எஸ். சுப்பிரமணியம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வங்கிகளை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது. வங்கிகள் தனியாா்மய சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளின் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது. அவா்களுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை (டிச. 17) முற்பகல் 11 மணிக்கு வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் நடத்துவது.

மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து 2022 பிப்ரவரி 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தம் தொடா்பாக ஜனவரி 4 ஆம் தேதி திருநெல்வேலியில் வேலைநிறுத்த ஆயத்த மண்டல மாநாடு நடத்துவது என்பது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.