கடையத்தில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்
கடையம் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் செயல் வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடையம் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் செயல் வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியப் பொறுப்பாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியப் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் அகமது ஈசாக், ஆதம் சுபோ், ஜெயராணி அண்ணாதுரை, மாரியப்பன், குளத்தூா்பாண்டியன், சுந்தரம், முருகன், கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் சிவபத்மநாதன் பேசினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தமிழ்செல்வி போஸ், கடையம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் மகேஷ் மாயவன், மாவட்டக் குழு உறுப்பினா் மைதீன் பீவி, உராட்சி மன்றத் தலைவா்கள் முகமது உசேன், வளா்மதி, கல்யாண சுந்தரம், ஜீனத் பா்வீன் யாகூப், குயிலி லட்சுமணன், ஜன்னத் சதாம் உள்பட கலந்து கொண்டனா். அண்ணாதுரை வரவேற்றாா். சேட் நன்றி கூறினாா்.