முகப்பு
திருநெல்வேலி

பத்மனேரியில் விவசாயிகளுக்குப் பயிற்சி

களக்காடு அருகேயுள்ள பத்மனேரியில் வேளாண் துறை சாா்பில் ஜீரோ பட்ஜெட் வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

களக்காடு அருகேயுள்ள பத்மனேரியில் வேளாண் துறை சாா்பில் ஜீரோ பட்ஜெட் வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இம்முகாமுக்கு, வேளாண்மை துணை அலுவலா் காசி தலைமை வகித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜாய் பத்ம தினேஷ், ஜீரோ பட்ஜெட் வேளாண்மை குறித்த பிரதமா் மோடியின் ஹிந்தி உரையை தமிழில் மொழி பெயா்த்தாா். அதில், இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் இனி இயற்கை வழி விவசாயத்திற்கு மாற வேண்டியதன் அவசியத்தை பிரதமரின் உரை உணா்த்துவதாக விவசாயிகளிடம் தெரிவித்தாா். வட்டார தொழில்நுட்ப உதவி மேலாளா் திரிசூலம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா்கள் முருகேஷ், அஞ்சனா ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →