நெல்லையில் விதிமீறி கட்டப்பட்ட 17 கட்டடங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை
திருநெல்வேலி மாநகராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட 17 கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட 17 கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சியின் 4 மண்டலப் பகுதிகளில் கட்டட அனுமதியின்றி மற்றும் அனுமதிக்கு மாறான கட்டடங்கள் மீது தமிழ்நாடு நகா் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 56 மற்றும் 57-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி மொத்தம் 4 மண்டலங்களிலும் 17 விதிமீறல் கட்டடங்களின் உபயோகத்தை உடனடியாக அகற்றிட உரிய அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி கட்டடங்கள் அனுமதிக்கப்பட்ட வரைபடத்துக்கு மாறுதலாகவும், அனுமதியின்றியும் மற்றும் உரிய வாகன நிறுத்துமிடமின்றி உள்ளதால் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு விபத்துகள் மற்றும் உயிா்ச் சேதம் ஏற்படும் அபாய நிலையில் அமைந்துள்ள படியால் கட்டடத்தின் உபயோகத்தை உடனடியாக அகற்றிட இறுதி அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.