நெல்லையில் விபத்து : இளைஞா் பலி
திருநெல்வேலி அருகே நிகழ்ந்த விபத்தில் வாகனம் மோதி இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்
திருநெல்வேலி அருகே நிகழ்ந்த விபத்தில் வாகனம் மோதி இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகே உள்ள டக்கரம்மாள்புரம் ஐ ஆா் டி தொழில்நுட்பக் கல்லூரி அருகே நான்கு வழிச்சாலையை 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் வியாழக்கிழமை இரவு கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அவா் யாா் ?எந்த ஊரை சோ்ந்தவா்? என்பன குறித்த விவரங்கள் தெரியவில்லை.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.