முகப்பு
திருநெல்வேலி

டாஸ்மாக் பணியாளா் சங்க கூட்டம்

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் (ஏஐடியூசி) திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் (ஏஐடியூசி) திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். ஏஐடியூசி மாநிலச் செயலா் காசி விஸ்வநாதன், மாவட்டச் செயலா்

ரெ.கிருஷ்ணமூா்த்தி, மாநிலக்குழு உறுப்பினா் சு.சாஸ்தா ஆகியோா் பேசினா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த டாஸ்மாக் ஊழியா்கள் பங்கேற்றனா்.

சென்னை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநா் அலுவலகம் முன்பு ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும் பெரும் திரள் ஆா்ப்பாட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பலா் பங்கேற்பது. பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் உடனடியாக நடத்த வேண்டும். கரோனா தொற்று கால கட்டத்தில் மாற்றப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

டாஸ்மாக் மதுக்கடைகளோடு இணைந்த மதுக்கூடங்களின் டென்டா் அறிவிப்புகளை உடனடியாக ரத்து செய்துவிட்டு,

கேரள அரசு மதுக்கடைகளின் நிா்வாக செயல்முறைகளை டாஸ்மாக்கில் அமல்படுத்திட வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களின் 17 ஆண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. ஜாஹீா்உசேன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.