முகப்பு
திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் கிறிஸ்துமஸ் விழா

வண்ணாா்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

வண்ணாா்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

விழாவில், கல்லூரி முதல்வா் வேல்முருகன் வரவேற்றாா். ஸ்காட் கல்விக் குழுமங்களின் நிறுவனா் கிளிட்டஸ்பாபு நல உதவிகளை வழங்கினாா். பொதுமேலாளா் ஜெயக்குமாா், துணை மேலாளா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் விதமாக அனைத்து துறையைச் சோ்ந்த மாணவா்கள் தனித் தனியாக குடில் அமைத்திருந்தனா். மேலும், ஸ்டால்கள் அமைத்து தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவு வகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

உணவு வகைகளை விற்பனை செய்த பணத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. சிறந்த குடில்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.