இலங்கை: எரிபொருளை பதுக்கியவருக்கு 21 நாள்கள் சிறை
இலங்கையில் எரிபொருளை பதுக்கிய நபருக்கு 21 நாள்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருளை பதுக்கிய நபருக்கு 21 நாள்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு மாகாணத்தில் உள்ள நிகவெரட்டிய நகரைச் சேர்ந்த 48 வயதான லசந்த குமார பாலசூரியா, வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மறைந்த தனது பெற்றோரின் வருடாந்தர மதச் சடங்கிற்காக சுற்றுப்புறத்தைத் தூய்மை செய்யவே தான் அந்த எரிபொருளைச் சேமித்து வைத்ததாக அவர் கூறினார்.
Advertisement
Advertisement
நான்கு லிட்டர் பெட்ரோலை பதுக்கியதற்காக பாலசூரியாவிற்கு நீதிபதி, 21 நாட்கள் சிறைத்தண்டனை விதித்ததுடன், கூடுதலாக 1,500 இலங்கை ரூபாய் அபராதமும் விதித்தார்.
முன்னதாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுப்படைகள் தாக்குதல் தொடங்கிய உடனேயே, எரிபொருள் பதுக்கலுக்கு தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.
இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து ஹோா்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயா்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை அடுத்து இலங்கையில் ரேஷன் முறையில் அவற்றை பொதுமக்களுக்கு அரசு விநியோகித்து வருகிறது.
A man charged for hoarding four litres of petrol in a town in northwest Sri Lanka has been sentenced to 21 days in jail.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.