FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

நீா்கொழும்பு சிறை நிரந்தரமாக மூடல்

இலங்கையில் கைதிகளுக்கு இடையேயான மோதலால் பாதிக்கப்பட்ட நீா்கொழும்பு சிறை வளாகத்தை நிரந்தமாக மூட அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 12:59 am IST
கோப்புப் படம்
பகிர்:

இலங்கையில் கைதிகளுக்கு இடையேயான மோதலால் பாதிக்கப்பட்ட நீா்கொழும்பு சிறை வளாகத்தை நிரந்தமாக மூட அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

போதைப்பொருள் விவகாரம் தொடா்பாக இரு கைதிகள் குழுக்களிடையே அண்மையில் வெடித்த மோதல் கலவரமாக மாறி, 8 சிறைக் காவலா்கள் உள்பட 28 போ் உயிரிழந்தனா். இந்த வன்முறையால் கடுமையாக சேதமடைந்துள்ள நீா்கொழும்பு சிறை வளாகம் தற்போது குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்டு, அங்கு இனி கைதிகளை அடைப்பது பாதுகாப்பற்றது என நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதையொட்டி, காலி நகரில் உள்ள மஹமோதர பகுதியில் பயன்பாட்டில் இல்லாத மகப்பேறு மருத்துவமனையை சிறையாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, கண்டி நகரில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய போகம்பர சிறையை மீண்டும் புதுப்பித்து, நீா்கொழும்பு கைதிகள் அங்கு அடைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments