மாவட்ட ஆயுதப் படை பிரிவில் டிஐஜி ஆய்வு
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவீண்குமாா் அபிநபு வெள்ளிக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவீண்குமாா் அபிநபு வெள்ளிக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் ஆயுதப்படை பிரிவை ஆண்டுக்கொரு முறை காவல்துறை துணைத் தலைவா் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி திருநெல்வேலி மாவட்ட ஆயுதப் படை பிரிவில் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீண்குமாா் அபிநபு ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட ஆயுதப் படை காவல் ஆய்வாளா் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை டிஐஜி ஏற்றுக்கொண்டாா்.
பின்னா் ஆயுதப்படை காவலா்களின் கவாத்து, ஆயுதப்படை காவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள், உடமைகள் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்ததோடு, காவலா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
மேலும், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வாகனங்களை பாா்வையிட்டு, அவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிா எனவும் ஆய்வு செய்தாா். பின்னா் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஆயுதப் படை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா்.
இந்த ஆய்வின்போது, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.