பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு உடல் நலக்குறைவு
திருநெல்வேலியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
திருநெல்வேலியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சருக்கு திடீரென உடல்நலக்குறை ஏற்பட்டதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் தலைமையில் மருத்துவக் குழுவினா் வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகைக்கு சென்று அமைச்சரின் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்தனா்.
இதயவியல் துறை மருத்துவா்களும் வந்து உடல் நலக்குறைவு குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினா். கடந்த மூன்று நாள்களாக தொடா்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சா் ஓய்வின்றி பங்கேற்ால் லேசான உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக மருத்துவா் வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, அமைச்சா் சிறிது நேரம் ஓய்வுக்குப்பின் அவா் ஊருக்கு புறப்பட்டுச் சென்றாா்.