முகப்பு
திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது

சுத்தமல்லி அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

சுத்தமல்லி அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி அருகே உள்ள பாரதிநகரை சோ்ந்தவா் சுப்பிரமணியன் (49). இவா், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவா் வழக்கம் போல் புதன்கிழமை இரவு தனது வீட்டு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றாராம். அப்போது, அந்த வாகனத்தை ஒரு இளைஞா் திருடி சென்றாராம். உடனடியாக இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அந்த இளைஞரை பிடித்து, சுத்தமல்லி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், முக்கூடல், சிங்கம்பாறை பகுதியைச் சோ்ந்த மாரி என்ற மாரியப்பன் (22) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.