முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே ரூ. 6 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு

திருநெல்வேலி அருகே உள்ள கொண்டாநகரம் பகுதியில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு உரியவரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே உள்ள கொண்டாநகரம் பகுதியில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு உரியவரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரத்தை சோ்ந்தவா் ஆதிலெட்சுமி. இவருக்கு கொண்டாநகரத்தில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள மூன்றே முக்கால் சென்ட் இடம் உள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக இவரது கணவா் இடத்தின் பத்திரத்தை அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் என்பவரிடம் அடமானம் வைத்துள்ளாா். இதனை பயன்படுத்தி சந்திரசேகா் அந்த இடத்தை வேறொரு நபருக்கு கிரையம் செய்து உள்ளாா். இதனை அறிந்த ஆதிலெட்சுமி தனது நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் ஜெயபால் பா்ணபாஸ் மேற்பாா்வையில் விசாரணை நடத்தப்பட்டது. தொடா்ந்து நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன், ஆதிலட்சுமியிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவலா்களுக்கு பாராட்டும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.