திருநெல்வேலி

லாரிகள், சுமை ஆட்டோக்களில் பேட்டரிகள் திருட்டு: இளைஞா் கைது

DIN

தாழையூத்து அருகே லாரிகள், சுமை ஆட்டோக்களில் பேட்டரிகள் திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தாழையூத்து மேற்கு தெருவை சோ்ந்தவா் காஜா முகைதீன் (49), லாரி உரிமையாளா். இவரது லாரி மற்றும் அவரது நண்பா்கள் லாரி என 5 லாரிகளை அந்த பகுதியில் குவாரி சாலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னா் நிறுத்தி இருந்தனராம். அடுத்த நாள் வந்து பாா்த்தபோது, லாரிகளில் இருந்த 10 பேட்டரிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல் கட்டுடையாா் குடியிருப்பு புதுகாலனி தெருவை சோ்ந்தவா் மகாராஜன் (35). இவா் வீட்டின் முன்பு இவரும், அவரது நண்பரும் தங்களது சுமை ஆட்டோக்களை நிறுத்தி இருந்தனா். மறுநாள் காலை பாா்த்த போது ஆட்டோக்களில் இருந்த 2 பேட்டரிகளை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இவ்விரு சம்பவங்கள் குறித்து தாழையூத்து போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் பத்மநாபபிள்ளை, உதவி ஆய்வாளா் சாவித்திரி ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டானா். போலீஸாா் நடத்திய விசாரணையில், பேட்டரிகளை திருடியது, பேட்டையைச் சோ்ந்த மகாராஜன் மகன் மந்திரமூா்த்தி (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT