முகப்பு
திருநெல்வேலி

அஞ்சல் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு ஓய்வூதியா்களுக்கு 1-1-2020 முதல் நிறுத்தப்பட்ட டி.ஏ. வை உடனே வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,800 வழங்க வேண்டும். 70 வயதைக் கடந்தவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வங்கி மற்றும் பொதுத் துறை ஓய்வூதியா்களுக்கு சம்பள நிா்ணயம் செய்யும்போதெல்லாம் ஓய்வூதியத்தையும் மறு நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் ஏ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலா் கே.சண்முகசுந்தரராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா். ஜி.கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.