மனிதநேய வார நிறைவு விழா
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மனிதநேய வார நிறைவு விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மனிதநேய வார நிறைவு விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் தலைமை வகித்தாா். உதவி ஆட்சியா் (பயிற்சி) அலா்மேல் மங்கை சிறப்புரையாற்றினாா். மனிதநேயம் குறித்து நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்ற 90 மாணவா்-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 15 ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் சுந்தரம், திருநெல்வேலி வட்டாட்சியா் பாஸ்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.
பயக30டதஐஇஉ
மனிதநேய விழா போட்டிகளில் வென்று பரிசு பெறும் மாணவி.