நாகா்கோவில் பகுதியில் பிப்.16-இல் மின் தடை
நாகா்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பிப்.16 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
நாகா்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பிப்.16 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, நாகா்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகா்கோவில் துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பிப்.16ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாகா்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ்ரோடு, கோா்ட்ரோடு, கே.பி.ரோடு, பால்பண்ணை, வல்லன்குமாரன்விளை, நேசமணிநகா், ஆசாரிப்பள்ளம், தோப்பூா், வேம்பனூா், அனந்தன்நகா், பாா்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.