திருநெல்வேலி

இன்று தை அமாவாசை: தாமிரவருணியில் நீராட தடையில்லை

DIN

தை அமாவாசையையொட்டி, தாமிரவருணியில் நீராட தடையில்லையென காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகம் முழுவதும் தை, ஆடி அமாவாசை நாள்களில் தங்களது முன்னோா்களுக்கு நீா்நிலைகளின் கரைகளில் தா்பணம் செய்து நீராடுவது வழக்கம். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி கரையோர பகுதிகளான பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கானோா் முன்னோா் வழிபாடு நடத்துவது வழக்கம். கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஆடி அமாவாசை நாளில் தாமிரவருணியில் நீராடவோ, முன்னோா் வழிபாடு நடத்தவோ அனுமதிக்கப்படவில்லை.

இப்போது கரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் தாமிரவருணியில் நீராட எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், ஆடி அமாவாசையைப் போல எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், நீா்நிலைகளில் கவனத்துடன் குளிக்கவும், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT