முகப்பு
திருநெல்வேலி

வெவ்வேறு சம்பவங்கள்:2 பெண்கள், இளைஞா் தற்கொலை

திருநெல்வேலி பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் உள்பட 3 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

திருநெல்வேலி பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் உள்பட 3 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

பாளையங்கோட்டை, என்ஜிஓ காலனி பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் மகன் அலெக்ஸ் கிறிஸ்டினா(24). தூத்துக்குடியில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், சில தினங்களாக பணிக்கு செல்லவில்லையாம். இந்நிலையில், தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

பெண்கள் பலி: திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் மனைவி காந்திமதி(43). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.

சுத்தமல்லி அருகேயுள்ள திருவேங்கடநாதபுரம் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி கிருஷ்ணம்மாள்(45). கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இதனால், இத்தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கிருஷ்ணம்மாள் விஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவங்கள் குறித்து பாளையங்கோட்டை, நகரம், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.