திருநெல்வேலி

வருவாய்த் துறையினா் 2-ஆவது நாளாக போராட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய்த் துறையினா் 2-ஆவது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அலுவலக உதவியாளா் முதல் வட்டாட்சியா் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். துணை வட்டாட்சியா்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள தனி ஊதியம் ரூ. 1,300, முதுநிலை வருவாய் ஆய்வாளா்களுக்கு ரூ. 9,300, அலுவலக உதவியாளா், பதிவுரு எழுத்தா்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படைப் பயிற்சி மற்றும் நில அளவைப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். பதவி உயா்வுக்கு இப்பயிற்சிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் புதன்கிழமை தொடங்கியது.

இப்போராட்டம் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீடித்தது. இதனால், ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ள வருவாய்த் துறையினா் அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT