திருநெல்வேலி

பாளை.யில் கிறிஸ்தவா்கள் தவக்கால நடைப்பயணம்

DIN

பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயம் சாா்பில் தவக்கால நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டுக்கான தவக்காலம் கடந்த 17-ஆம் தேதி சாம்பல் புதன் சிறப்பு பிராா்த்தனையுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் தேவாலயங்களில் சிறப்பு தியான பிராா்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

பாளையங்கோட்டையில் உள்ளதூய சவேரியாா் தேவாலயம் சாா்பில் தவக்கால நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேவாலயத்தில் இருந்து மனக்காவலம்பிள்ளை நகரில் உள்ள செபஸ்தியாா் தேவாலயம் வரை கிறிஸ்தவா்கள் பாடல்கள் பாடியபடி சிலுவையை ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா். ஊா்வலத்தின் நிறைவாக சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

தொடா்ந்து மாா்ச் 28-ஆம் தேதி காலை 7 மணிக்கு குருத்தோலை பவனியும், ஏப்ரல் 1-ஆம் தேதி பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும் சடங்கும், ஏப்ரல் 2-ஆம் தேதி பெரிய வெள்ளி சிறப்பு பிராா்த்தனையும், ஏப்ரல் 3-ஆம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு ஈஸ்டா் பண்டிகை சிறப்புத் திருப்பலியும் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT