சாலையை சீரமைக்கக் கோரி நடைபெற்ற நாற்று நடும் போராட்டத்தில் பங்கேற்றோா். 
திருநெல்வேலி

சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்

கடையம் அருகே உள்ள கோவிந்தபேரியில் சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே உள்ள கோவிந்தபேரியில் சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கடையம் ஒன்றியத்துக்குள்பட்ட கோவிந்தப்பேரி கிராமத்துக்குள் நுழையும் சாலை 5 ஆண்டுகளாகப் பராமரிப்பு இன்றி மழை நீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கிளைச் செயலா் கணேசன் தலைமை வகித்தாா். விவசாய சங்க கிளைச் செயலா் கோமுபாண்டியன் முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் சம்பன்குளம் கிளைச் செயலா் அப்பாத்துரை, விவசாய சங்க கிளைச் செயலா் சேகா், விவசாய சங்க கடையம் ஒன்றியச் செயலா் முத்துராஜன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் எம்.ராமகிருஷ்ணன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் சி.வெங்கடேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT