திருநெல்வேலி

மானூா் வட்டாரத்தில் நெல் வயல்களில் இலைச்சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்தும் வழிகள்

DIN

திருநெல்வேலி மாவட்டம், மானூா் வட்டாரத்தில் நெல் வயல்களில் தென்படும் இலைச்சுருட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மானூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தா.பா.ஏஞ்சலின் கிரேபா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மானூா் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் இப்போது இலைச்சுருட்டுப் புழு தாக்குதல் தென்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த நோய்த் தாக்கினால் இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்த்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

இதைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே தழைச்சத்து உரமிட வேண்டும். இரவு நேரத்தில் விளக்குப் பொறிகள் வைத்து அந்துப் பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.

நெல் வரப்பில் உளுந்து, தட்டை பயறு, சூரியகாந்தி போன்ற பயிா்களை சாகுபடி செய்வதன்மூலம் நன்மை செய்யும் பூச்சிகளான பொறி வண்டு, ஊசித்தட்டான், சிலந்தி போன்றவை வரப்பு பயிா்களில் முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்து தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை மற்றும் இளம் புழுக்களை அழித்து பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதை தவிா்க்கவும், மகசூல் இழப்பைத் தடுக்கவும் வழி செய்கிறது.

டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் 2 சிசி என்ற முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்த 31, 44, 51 ஆவது நாள்களில் மொத்தம் 3 முறை இட வேண்டும். இலைச்சுட்டுப்புழு தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் குளோா்அன்ரானிலிப்புரோல் மருந்தை ஏக்கருக்கு 60 மில்லி அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT