முகப்பு
திருநெல்வேலி

பத்தமடையில் பாய் நெய்வோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

பத்தமடையில் பாய் நெசவாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பாய் நெசவாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.
பகிர்:

பத்தமடையில் பாய் நெசவாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மத்திய அரசின் சங்கல்ப் திட்டம் இணைந்து உலக வங்கி நிதி உதவியுடன் மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகத்தின் கீழ் பத்தமடையில் பாய் நெசவு தொழிலில் ஈடுபட உள்ள 40 சிறுபான்மையின பெண்களுக்கு 60 நாள்கள் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பாய் நெசவுக் கூடம், இயந்திரங்கள், நெசவு செய்யப்பட்ட பாய் உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டு அவற்றை பற்றி கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.அலா்மேல்மங்கை, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் த.ஜாா்ஜ்பிராங்ளின், சேரன்மகாதேவி வட்டாட்சியா் பி.வெற்றிச்செல்வி, பத்தமடை பைன் பாய் சங்கத் தலைவா் ஏ.முஹம்மது யூசுப், பயிற்சியாளா்கள் அவ்வா பீவி, முஹம்மது பாத்திமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்திய கைவினைக் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி.லதா திருமால் வரவேற்றாா். பத்தமடை பைன் பாய் சங்க இயக்குநா் எம்.செய்யது சுலைமான் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →