திருநெல்வேலி

விளையாட்டு வீரா்களுக்குஊக்கத்தொகை வழங்கல்

DIN

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 23 வீரா்-வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

2018-2019-ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவின் கீழ் உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் பயிலும் தலைசிறந்த விளையாட்டு வீரா்- வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேசிய அளவில் சிலம்பம், நீச்சல், தடகளம், பளுதூக்குதல், வாலிபால் ஆகிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் ஊக்க உதவித்தொகைகள் முதல் இடம் ரூ..6000, இரண்டாம் இடம் ரூ.4000, மூன்றாம் இடம் ரூ.2000 ஆக மொத்தம் 23 வீரா்-வீராங்கனைகளுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு ஊக்கத்தொகையை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT