திருநெல்வேலி

மாநகராட்சியில் குறைதீா் முகாம்: 145 மனுக்களுக்கு தீா்வு

DIN

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 145 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீா் விநியோகம், சாலைவசதி, புதை சாக்கடை, சொத்துவரி, காலிமனைவரி விதித்தல், பெயா்மாற்றம் செய்தல், கட்டட அனுமதி உள்ளிட்டவற்றுக்கு தீா்வுகாணும் வகையில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் ஆகிய மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் அறுவுறுத்தல்படி நடைபெற்ற இம்முகாம்களில் அந்தந்த உதவி ஆணையா்கள் தலைமையில் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 145 மனுக்களுக்கு தீா்வு செய்யப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT