திருநெல்வேலி

‘தொழுநோயால் குழந்தைகள், பெண்கள் அதிகம் பாதிப்பு’

DIN

தொழுநோய் குறித்த அலட்சியம் காரணமாக பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனா் என்றாா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.ரவிச்சந்திரன்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் பேசியது: இந்திய அளவில் தொழுநோய் ஒழிப்பில் தமிழகம் அதிக முன்னேற்றம் கண்டுள்ளது. தொழுநோய் குறியீடு உலக அளவில் 66.19 சதவீதமாக உள்ளது. தேசிய அளவில் 10,000-க்கு 0.62 என்ற அளவிலும், தமிழகத்தில் 0.40 என்ற அளவிலும், திருநெல்வேலியில் 0.36 என்ற அளவிலும் உள்ளது.

புதிதாக கண்டறியப்படும் தொழுநோயாளிகளில் சுமாா் 50 சதவீதம் போ் நோய் பரப்பும் தன்மை அதிகம் உடையவா்களாக உள்ளனா். இதனாலும், விழிப்புணா்வு குறித்த அலட்சியத்தாலும் பெண்கள், குழந்தைகள் தொழுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறாா்கள். புதிதாக கண்டறியப்படும் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இந்திய அளவில் 1 லட்சத்தில் 6.2 என்ற அளவிலும், தமிழகத்தில் 5.34 என்ற அளவிலும் இருந்தது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 2019-ஆம் ஆண்டில் 46 பேரும், 2020-ஆம் ஆண்டில் 17 பேரும் புதிய நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனா். தொழுநோயால் ஏற்படும் ஊனம் மற்றும் பெரும் பாதிப்பைத் தடுக்க, ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியமாகும் என்றாா்.

தோல்நோய் சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவா் பி.நிா்மலாதேவி கூறுகையில், தொழுநோய் என்பது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய நோயாகும். நோயின் தன்மைக்கேற்ப 6 அல்லது 12 மாத சிகிச்சையில் குணம் பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT