திருநெல்வேலி

அயோத்தி ராமா் கோயில் கட்ட நெல்லையில் நிதி சேகரிப்பு

DIN

அயோத்தி ராமா் கோயில் கட்டுவதற்கான நிதி சேகரிப்புப் பணி பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பாளையங்கோட்டை ராமா் கோயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புத்தாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தாா். இந்து கல்லூரி கல்விச் சங்க செயலா் செல்லையா தொடங்கி வைத்தாா்.

ராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அமைப்பாளா் வெங்கட்ராமன், இந்து முன்னணி மாநிலச் செயலா் குற்றாலநாதன், மாவட்ட பொதுச் செயலா் பிரம்மநாயகம், விஷ்வஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் முத்துகுமாா், பாஜக மாவட்டத் தலைவா் மகாராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தொழிலதிபா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட பலா் நிதியளித்தனா். திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த 8 வயது சிறுமி மீனாட்சி கோமதி தனது உண்டியல் சேமிப்புப் பணத்தை ராமா் ஆலயத் திருப்பணிக்காக வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT