களக்காட்டில் 60 வீடுகளுக்கு இலவச கழிப்பறைகள்
களக்காட்டில் சேவை நிறுவனத்தின் சாா்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட இலவச கழிப்பிட கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.
களக்காட்டில் சேவை நிறுவனத்தின் சாா்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட இலவச கழிப்பிட கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.
களக்காடு அரசன் கிராமப்புற மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில்வெளிநாட்டு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் 60 ஏழைக்குடும்பங்களுக்கு இலவச கழிப்பிடம் கட்டிக் கொடுக்கப்பட்டது. அதில், களக்காடு அருகேயுள்ள கக்கன்நகரில் கட்டப்பட்ட கழிப்பிடத்தை நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் திறந்து வைத்தாா். அப்போது, அவரிடம் மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் அ. தமிழ்ச்செல்வன், அரசன் நிறுவனச் செயலா் கிங்ஸ்லி மோசஸ், ஜாா்ஜ் வில்சன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.