முகப்பு
திருநெல்வேலி

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருநெல்வேலி குறிச்சி பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

திருநெல்வேலி குறிச்சி பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் கருப்பசாமி (42). இவா் ஆட்டோவில் மேலப்பாளையம் பகுதிகளில்

உள்ள கடைகளுக்கு பழங்கள் வழங்கி வந்தாா். வழக்கம்போல வியாழக்கிழமை ஆட்டோவில் பழங்களை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி சந்திப்பில் இருந்து மேலப்பாளையம் சென்றுகொண்டிருந்தாராம்.

குறிச்சி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ

இடத்திலேயே உயிரிழந்தாா். போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.