கொத்தடிமைகளை மீட்க தொலைபேசி எண் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வரும் தொழிலாளா்கள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வரும் தொழிலாளா்கள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வரும் கூலித் தொழிலாளா்களை உடனடியாக மீட்கவும், அவா்களின் மறுவாழ்வுக்காகவும் கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 1800 4252 650 சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கொத்தடிமைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.