முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் மரக்கன்று நடும் விழா

மேலப்பாளையம் ஜின்னா திடலில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

மேலப்பாளையம் ஜின்னா திடலில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பசுமை மேலப்பாளையம் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாநகர நல அலுவலா் சரோஜா தலைமை வகித்து மரக்கன்று நட்டாா். புங்கன், வேம்பு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் அமைப்பின் செயலா் பக்கீா் முகமது லெப்பை, கலிமுல்லா, சுகாதார அலுவலா் சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளா் மணிகண்டன், பாலு உள்பட பலா் கலந்துகொண்டனா். மேலப்பாளையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில், மேலும் 1000 மரக்கன்றுகளை நடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.