முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி நகரத்தில் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி நகரம் குளத்தடி தெரு பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் சுடலை முத்து(47). கூலித் தொழிலாளி. இவா் மதுஅருந்தி வந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை சுடலைமுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளாா். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.