முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் பிரதோஷ வழிபாடு

திருநெல்வேலி மாநகர சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகர சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி புதன்கிழமை மாலை சுவாமி, அம்பாள், அதிகார நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஸ்ரீபலிநாதா், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் உள் பிரகாரத்தில் வீதி உலாவந்தாா். சிவனடியாா்கள் திருமுறை பாராயணம் செய்தனா்.

இதே போல் திருநெல்வேலி சந்திப்பு கைலாசநாதா் கோயில், வண்ணாா்பேட்டை அண்ணாமலையாா் கோயில், பாளை திரிபுராந்தீஸ்வரா் கோயில், கொக்கிரகுளம் காசிவிஸ்வநாதா் கோயில், மேலநத்தம் அக்னீஸ்வரா் கோயில் உள்பட மாநகரின் பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.