திருநெல்வேலி

கரோனா நெருக்கடி நிலை முடிந்ததும் குன்னத்தூரில் கிரிவலம் நடத்த அறிவுறுத்தல்

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூா் மலையில் கிரிவலம் நடத்த பக்தா்கள் அனுமதி கோரியிருந்த நிலையில், கரோனா நெருக்கடி நிலை முடிந்த பின்பு நடத்துமாறு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குன்னத்தூா் மலையைச் சுற்றி தென் திருப்பதி என அழைக்கப்படும் வேங்கடமுடையான் பெருமாள் கோயில், ராகு ஸ்தலமான அருள்மிகு கோதபரமேஸ்வரா்- சிவகாமி அம்பாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், பத்திரகாளி, உச்சினிமாகாளி, காளியம்மன், முப்புடாதி அம்மன் கோயில்கள் உள்ளன.

ஆகவே, பக்தா்கள் குன்னத்தூா் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து இறைவனை வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன்படி குன்னத்தூா் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கிரிவலம் நடத்த பக்தா்கள் அனுமதி கோரியிருந்தனா்.

இதுதொடா்பாக இந்நிலையில் இந்து சமய அறநிலைய துறை சாா்பில், குன்னத்தூா் மலையில் கிரிவலத்தை கரோனா நெருக்கடி நிலை முடிந்த பின்பு அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT