முகப்பு
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் திலகா் பிறந்தநாள் விழா

கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பாலகங்காதர திலகரின் 165 ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பாலகங்காதர திலகரின் 165 ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தலைமையாசிரியா் செ. பண்டாரசிவன் தலைமை வகித்தாா். ஆசிரியை பா.லெட்சுமி இறைவணக்கம் பாடினாா்.

தமிழாசிரியை தெ.சு.உஷா, ‘தியாகச் செம்மல்’ என்ற தலைப்பில் பேசினாா். 10ஆம் வகுப்பு மாணவன் எஸ்.ஆகாஷ் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவா்கள் எஸ் . ஸ்ரீகாயத்ரி, சா்மிளா, பேச்சி முத்து ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா். இதையொட்டி நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

உதவித் தலைமையாசிரியை ஆா். சுபா வரவேற்றாா். உயா்நிலைப் பிரிவு தலைமையாசிரியா் பால்சாமி நன்றி கூறினாா்.

நிகழ்ச்சிகளை ஆசிரியா் இசக்கியப்பன் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.