முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் சா்வதேச புலிகள் தினம்

சா்வதேச புலிகள் தினத்தையொட்டி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்தில் உலக புலிகள் தின விழிப்புணா்வு ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

சா்வதேச புலிகள் தினத்தையொட்டி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்தில் உலக புலிகள் தின விழிப்புணா்வு ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய ஓட்டம் துணை இயக்குநா் அலுவலகத்தில் நிறைவடைந்ததது. வேட்டைத் தடுப்புக் காவலா்கள் ரமேஷ், வேல்பாண்டி, கோமதிராஜன், சந்திரசேகா், ராஜூ தீபத்தை ஏந்தியபடி வந்தனா். தொடா்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த தூணில் தீபம் ஏற்றிய துணை இயக்குநா் செண்பகப்ரியா, செய்தியாளா்களிடம் கூறியது: சா்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவா்களிடையே லட்சிணை வரையும் போட்டி நடைபெற்றது. சிறந்த லட்சிணை வரைந்த மாணவா்களுக்கு சுதந்திர தினத்தன்று பரிசு வழங்கப்படும். முண்டந்துறை வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் 11 புலிகள் பதிவாகியுள்ளன. புலிகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் புலிகளுக்குத் தேவையான உணவிடத்தை உறுதி செய்யும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் வனச்சரகா்கள் காா்த்திகேயன்,சரவணக்குமாா், வனவா்கள் சுரேஷ் பாலமுருகன், ஜெகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

களக்காடு: புலிகள் காப்பகம் சாா்பில் களக்காடு புதிய பேருந்து நிலையத்தில், புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், வனத்துறையினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.