முகப்பு
திருநெல்வேலி

‘ராதாபுரம் தொகுதியில்வளா்ச்சிப் பணிகளை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை’

ராதாபுரம் தொகுதி மேம்பாட்டுக்காக அதிமுக அரசு கொண்டு வந்த வளா்ச்சிப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

ராதாபுரம் தொகுதி மேம்பாட்டுக்காக அதிமுக அரசு கொண்டு வந்த வளா்ச்சிப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

அவா் அளித்துள்ள மனு விவரம்: ராதாபுரம் பேரவைத் தொகுதி மேம்பாட்டுக்காக அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை தற்போதைய அரசு நிறுத்தி வைக்க முயற்சிப்பதாக தெரிகிறது. தாமிரவருணியாறு-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டத்தில் கடைக்கோடியில் உள்ள எம்.எல்.தேரிக்கு தண்ணீா் கொண்டு வந்து தேக்குவதால் அப்பகுதியில் உள்ள கனிமவள நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அத்திட்டத்தை மறுவடிவமைத்து செயல்படுத்தவும், அதுவரை நான்காம் கட்ட பணிகளை நிறுத்தி வைக்கவும் ஆளுங்கட்சியினா் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

ராதாபுரம் கால்வாய்க்கு கன்னியாகுமரி மாவட்டம் பழையாற்றிலிருந்து நீரைக் கொண்டு வர அதிமுக அரசு ரூ.169 கோடியில் திட்டம் அறிவித்தது. முதல் கட்டமாக ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இத்திட்டத்தை அரசு கிடப்பில் போட முயற்சித்து வருகிறது.

ராதாபுரம் தொகுதியில் மீனவா்கள் பயன்பெறும் வகையில் ரூ.10 கோடியில் இடிந்தகரையை அடுத்த அருவிக்கரையில் புதிய மீன்பிடித் துறை முகம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தை நிறுத்தி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே, ராதாபுரம் தொகுதி வளா்ச்சிக்காக அதிமுக அரசு கொண்டு வந்த வளா்ச்சிப் பணிகளை காலதாமதமின்றி விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.