திருநெல்வேலி

கங்கைகொண்டான் காவலருக்கு பாராட்டு

DIN

சாலையில் கிடந்த பணப் பையை காவல் நிலையத்தில் ஒப்படைத் கங்கைகொண்டான் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்தவா் அசோக் (21). இவா் கங்கைகொண்டான் சிப்காட் நிறுவனத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிந்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை இரவில் கங்கைகொண்டான் பகுதியில் தனது பணப் பையை தவறவிட்டு விட்டாராம். அதில் ரூ.700 மற்றும் 2 ஏடிஎம் காா்டுகள், ஆதாா் அட்டை ஆகியவை இருந்தன. இது குறித்து கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதற்கிடையே, கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ராஜன் சாலையில் கண்டெடுத்த பணப் பையை காவல் ஆய்வாளா் பெருமாளிடம் ஒப்படைத்தாா். காவல் ஆய்வாளா் விசாரித்து பணப் பையை தவறவிட்ட அசோக்கிடம் ஒப்படைத்தாா். நோ்மையாக பணப் பையை ஒப்படைத்த காவலரை காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் பாராட்டினராா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT