மேலும் 37 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,875ஆக அதிகரித்துள்ளது. இதில் 16 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 47,108ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 427போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 340 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,844ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,213ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 480 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 151 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.