திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ : மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டில் திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறித்து...
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டுப் பேசும்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.
அதிமுக ஆட்சி அமைத்தால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ஃபிரிட்ஜ் (குளிர்பதனப் பெட்டி) வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தங்கள் தேர்தல் அறிக்கையாக அறிவித்திருந்தார்.
இதனிடையே திமுக இல்லத்தரசிகளைக் கவரும் வகையில் ரூ. 8,000 கூப்பன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி, கிரைண்டர், மைக்ரோவேவ் ஓவன் போன்றவற்றை வாங்க, ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும்.
இல்லத்திற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை புதிதாக வாங்கவோ, மாற்றாக வாங்கவோ இல்லத்தரசி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.
திமுக வாக்குறுதிகளில் முக்கியமானவை
1 - 5 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.
சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்.
முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுவினர் தொழில் தொடங்க பிணையின்றி ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
பேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25,000 ஆக உயர்த்தப்படும்.
டயாலிசிஸ் வசதிகள் இருமடங்காக அதிகரிக்கப்படும்
அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் உருவாக்கப்படும்.
முதியோர் உதவித் தொகை ரூ. 1200-லிருந்து ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.2,5000 ஆக உயர்த்தப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 5 ஆக உயர்த்தப்படும்.
திருச்சி, மதுரை, கோவையில் புதிய துணை நகரங்கள்.
அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 10,000 பேருந்துகள்.
அன்னிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.