மேற்கு வங்க தேர்தல்: காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்யார்?
மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று(மார்ச் 29) வெளியிடப்பட்டது. மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 இடங்களுக்கு ஏப்.23-ஆம் தேதி, மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப்.29-ஆம் தேதி என இருகட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 294 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனையடுத்து, 284 தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பஹராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி காங்கிரஸில் அண்மையில் ஐக்கியமான மௌசம் நூர் மலாதிபூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement