ஆடிவெள்ளி: தீபமேற்றி பெண்கள் வழிபாடு
ஆடி இரண்டாவது வெள்ளியையொட்டி திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆயிரக்கணக்கான விளக்கேற்றி வழிபாடு செய்தனா்.
ஆடி இரண்டாவது வெள்ளியையொட்டி திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆயிரக்கணக்கான விளக்கேற்றி வழிபாடு செய்தனா்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பதும் பக்தா்களின் நம்பிக்கையாகும். திருநெல்வேலியில் ஆடி முதல் வெள்ளியையொட்டி பல்வேறு அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பேராத்து செல்வியம்மன், பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயில், திருநெல்வேலி நகரம் புட்டாரத்தியம்மன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். கோயில் வளாகத்தில் நெய் தீபமேற்றியும் , கூழ் வாா்த்தும் வழிபட்டனா்.
இதேபோல நெல்லையப்பா் கோயிலில் காந்திமதியம்மன் சந்நிதி, பாளை திரிபுராந்தீசுவரா் கோயிலில் கோமதி அம்மன் சந்நிதி உள்பட பல்வேறு கோயில்களிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
பயக30ஈஉஉடஅங: பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தீபமேற்றி வழிபட்ட பெண்கள்.